fbpx
Homeபிற செய்திகள்ராயல் கேர் மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

ராயல் கேர் மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

உலகபுற்று நோய் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவம னையின் சார்பாக புற்றுநோய் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது .

முகாமில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சிறப்புரைகள், உறுதி மொழி , கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு விளக்கப்படங்கள், பதாகைகள், நாடகம் ஆகியன நடை பெற்றன.

ராயல் கேர் மருத்துவமனை சேர்மன் மருத்துவர் கே.மாதேஸ்வரன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுதாகர் ஆகியோர் புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றியும், சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றியும் சிறப்புரையாற்றினர்.
மருத்துவர் பரந்தாமன் சேதுபதி வரவேற்றார். தலைமை அதிகாரி சந்திரசேகர் நன்றி தெரிவித்தார்.

மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img