தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக, கோவையில் செயல்படும் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக 27 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து நேற்று (செப்.30) வயது முதிர்வின் காரணமாக, சி.பாலசுப்பிர மணியம் ஓய்வு பெற்றார்.
அவருக்கு இப்பயிற்சி நிலையத்தில் பணி நிறைவு விழா நடந்தது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப் பதிவாளர்/ இயக்குநர் எம்.பத்மினி தலைமை தாங்கினார்.
பயிற்சி நிலையத்தின் துணைப்பதிவாளரும் முதல்வருமான நா.ஸ்ரீதர் வரவேற்றார்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள், இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள், துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப் பாளர்கள், துணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர், வீட்டு வசதி கண்காணிப்பாளர், முன்னாள் ஓய்வு பெற்ற துறை அலுவலர்கள், இதர பணியாளர்கள் வாழ்த் துரை வழங்கினர்.
பயிற்சி நிலையத்தின் முதுநிலை ஆய்வாளர்/ விரிவுரையாளர் நன்றி கூறினார்.
கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், கோவை சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை நிர்வாக அலுவலர் பிராங்கிளின் தாமஸ் ஆகியோர் சி.பாலசுப்பிரமணி யத் துக்கு, பொன்னாடை அணிவித்து கௌர வித்த னர்.



