கோவை மாநகராட்சி வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாண விகளின் கல்வி கற்றல் திறன் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (செப்.30) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கல்வி கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவி களின் திறனைக் கண்டறிய செய்தித்தாள் வாசிப்பு மூலமும், கரும்பலகை மூலமும் கணிதத்திறன் குறித்து தங்களது திறனை வெளிப்படுத்துமாறு எடுத் துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் செய்தித் தாள்களை வாசித்து தங்களது திறனை வெளிப்படுத்தியும், கரும்பலகையில் கணித பாடத்திறன் குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது கணித அறிவுத்திறனை வெளிப்படுத்தினர்.
மிகச்சிறப்பாக கல்வித் திறனை வெளிப் படுத்திய மாணவிக்கு, மாநகராட்சி ஆணையாளர், புத்தகம் வழங்கி பாராட்டினை தெரிவித்தார்.
அப்பள்ளியில் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்த பின்னர், பள்ளியின் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின் போது, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசி ரியர்கள் உடனிருந்தனர்.



