fbpx
Homeபிற செய்திகள்மொழிப்போர் தியாகிகளுக்கு கதிர்ஆனந்த் மரியாதை

மொழிப்போர் தியாகிகளுக்கு கதிர்ஆனந்த் மரியாதை

வேலூர் மாநகர திமுக சார்பில் திமுக அலுவல கத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் எம்.பி.முகமது சகி, முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், ராமலிங்கம் ஆர்.பி.ஏழுமலை, சுந்தர், விஜி, காட்பாடி பகுதி செயலாளர் வன்னிய ராஜா, சக்கரவர்த்தி, ஆர்.பி.ரமேஷ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கஸ்பாவைச் சேர்ந்த தியாகி மாசிலாமணி கவுரவிக்கப்பட்டார்.
இதில் மாவட்ட கழக, பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img