fbpx
Homeபிற செய்திகள்மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ‘வாக்கத்தான்’

மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ‘வாக்கத்தான்’

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவின் ஒரு முன்னெடுப்பாக நேற்று (நவ.7) தூத்துக்குடியில் ‘வாக்கத்தான்’ நடந்தது.
இதுகுறித்து இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.பி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடியில் உள்ள ரோச் பூங்காவில் தொடங்கி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடந்த ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங் கேற்றனர்.

காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் கொடியசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.வி. ராம மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மண்டலத்தில் மட்டும் சுமார் 1100 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, சென்னை, சேலம், கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், மும்பை ஆகிய 12 மண்டலத்திலும் நடந்த ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இதில் மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img