fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இரு கை, கால்களை இழந்தவருக்கு எடை குறைந்த அங்கங்கள் பொருத்தம்-மருத்துவக்குழுவுக்கு கோவை...

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இரு கை, கால்களை இழந்தவருக்கு எடை குறைந்த அங்கங்கள் பொருத்தம்-மருத்துவக்குழுவுக்கு கோவை ஆட்சியர் பாராட்டு

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு கைகள் மற்றும் இரு கால்களை இழந்த வாலிபருக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பில் நவீன எடை குறைந்த கைகள் மற்றும் கால்கள், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், குமரன் குன்று வேப்பம்பள்ளம் பகுதியினை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 22). இவருடைய பெற்றோர் கட்டிட வேலை செய்பவர்கள்.

இவர் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட மின்சார விபத்தால் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும் இரண்டு கைகளை முழங் கைகளுக்கு கீழும் இழந்தார். மிக வும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில், அனைத்து வேலைக்கும் பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இருந்தார்.

இவர், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரனிடம், உதவி வேண்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதனடிப்படையில், தேவையான அரசு உதவிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து வழங்கும்படி, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார், கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலாவுக்கு ஆட்சியர் பரிந் துரைத்தார்.

முதற்கட்டமாக சுபா ஷுக்கு, செயற்கை கை மற்றும் கால் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலா, முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநர் டாக்டர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஆனந்த்பாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் இரு செயற்கை கால்கள் இலவ சமாக பொருத்தப்பட்டன.

இவருக்கு மனப்பயிற்சி, உடற்ப யிற்சி, நடைபயிற்சி ஆகியவை முடநீக்கியல் மருத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களால் வழங்கப்பட்டன.

இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்த வருக்கு, தமிழ்நாட்டில் இதுவே முதன் முறையாக விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த செயற்கை அங்கங்களை தனியாரிடம் தருவிப்பதற்கு குறைந்த பட்சம் ரூ.2,50,000 செலவாகும். மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனை, சுபாஷ் நேற்று (ஜூலை 21) சந்தித்து தனக்கு பொருத்தப்பட்ட செயற் கை கால்களை காண்பித்தும், செயற்கை கைகளால் கைகு லுக்கியும் நன்றி தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவுக்கு ஆட்சியர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img