மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதத்தை நினை வூட்டும் விதமாக, கேஎம்சிஎச் மார்பக சிறப்பு துறையின் முன்னணி மருத்துவர் ரூபாரெங்க நாதன், மார்பக புற்று நோயினால் உண்டாகும் இறப்பைக் குறைப்பதற்கான ஒரே திறவுகோல் அதனை முன்கூட் டியே கண்டறிவது என்றும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
முன் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கே மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் உள்ளது என்ற நிலைமாறி, கடந்த 20 வருடங்களில் 30-40 வயதிற்கு உட்பட்ட பெண்களிடையேயும் இந்த நோய் கண்டறியப்படுகிறது என்றும் அவர் கூறினார். அவர் கூறியதாவது:
சமீப காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சத வீதம் பேர் 50 வயதிற்கு உட்பட்டவர்கள்.
சரியான நேரத்தில் நோயறிதலின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகையில், பல பெண்கள் கட்டிகள், முலைக்காம்பில் நீர்வடிதல் மற்றும் மார்பக வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை கண்டு கொள்வதில்லை.
இது பெரும் பாலும் மார்பக புற்றுநோயை தாம தமாக கண்டறிவதற்கு வழிவகுக் கிறது. மார்பக பயாப்ஸி இதுபோன்ற நிலைமைகள் பற்றியும் மேலும் வாக்யூம் – உதவியுடன் செய்யப்படும் மார்பக பயாப்ஸி ((VABB) போன்ற மேம்பட்ட நுட்பங் களைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
இது ஒரு மேம்பட்ட மற்றும் நுண்துளை மூலம் பரிசோதனை செய்யும் தொழில் நுட்பமாகும். இது மிகச்சிறிய கட்டிகளை கூட மாதிரியாக சேகரிக்க உதவுகிறது. இளம் பெண்களில் பொதுவாக ஏற்படும் புற்று நோய் அல்லாத சிறிய ஃபைப்ரோடெனோமா (Fibroadenoma) கட்டிகளை அழகை பாதிக் காமல் நுண்துளை சிகிச்சையான க்ஷிகிஙிஙி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலும் மற்றும் தழும்பு இல்லாமலும் அகற்ற முடியும்.
இந்த அக்டோபரில், பெண்கள் தங்கள் மார்பக ஆரோக்கியத்தை சிறப் பாக கவனித்துக் கொள்வதற்கும், அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக் கொள்வதற்கும் உறுதிமொழி எடுக்கட் டும். பெண்கள் பொதுவாக மார்பகத் தில் கட்டிகள் கண்டறியப்பட்டவுடன், அது புற்றுநோய் இல்லாத கட்டியாக இருந்தாலும் கவலைப்படுகிறார்கள்.
இளம் பெண்களில் (15-35 வயது), மார்பக சுரப்பி திசுக்களில் புற்று நோய் அல்லாத கட்டிகள் ஏற் படுவது பொதுவானது. மார்பக பயாப்ஸிகளில் மார்பக கட்டிகளை பரி« சாதனைக்கு உட்படுத்தும்போது, 20,35வயதிற்கு கீழ் உள்ள பெண்களில், 50 சதவீதம் கட்டிகள் ஃபைப்ரோடெனோமாவாக உள்ளது.
மேலும் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களின் பயாப்ஸிகளில் இந்த விகிதம் 75% அதிகரிக்கிறது. ஃபைப்ரோடெனோமா எனப்படும் இந்த கட்டி, மென்மையான, ரப்பர் போலவோ அல் லது கடினமான கட்டியாகவோ உணரலாம்.
மற்றொரு மிகவும் பொதுவான நிலை, ஃபைப்ரோ சிஸ்டிக் மார்பக நோய் மார்பகங்களுக்கு ஒரு கட்டி அல்லது கயிறு போன்ற அமைப்பைக் கொடுக்கிறது மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களில் கண்டறியப்படுகிறது.
பாரம்பரியமாக, இவை அறுவை சிகிச்சை முறையில் அகற்றப்படும், இதனால் பின் விளைவுகள் மற்றும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பல இளம் பெண்கள், அக்கட்டியுடனே கவலையுடனும், மன உளைச்சலுடனும் வாழ முடிவு செய்வார்கள்.
வாக்யூம்-உதவியுடன் செய்யப்படும் மார்பக பயாப்ஸி போன்ற மேம்பட்ட தொழில் நுட்பம் இத்தகைய சூழ்நிலைகளுக்கு விடியலாக வருகிறது. தழும்புகள் அல்லது மார்பக சிதைவு இல்லாமல் புற்றுநோய் அல்லாத சிறிய கட்டிகளை முற்றிலும் அகற்ற VABBஉதவுகிறது.
இது பெண்களுக்கு மிகவும் நம் பிக்கை அளிக்கிறது.
VABB இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், கட்டி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மற்றும் மார்பகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், சந்தேகத்திற்கிடமான பகுதியை VABBஐ பயன்படுத்தி எளிதாக அடைய முடியும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் சிறிய அளவிலான திசு சிதைவு இருந்தால் கூட, அதில் இருந்து எளிதாக மாதிரி சேகரிக்கப்படும்.
மார்பகப் புற்று நோயைக் கண்டறிதல் மற்றும் புற்று நோயற்ற கட்டிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தினால், மார்பகப் பகுதியில் ஏதேனும் அசாதாரணங்கள் உள்ள அனைத்து வயதை சேர்ந்த பெண்களுக்கும் ஒரு நிவாரண உணர்வு கிடைத்துள்ளது என்பதே நிதர்சனம். இவ்வாறு டாக்டர் ரூபா ரெங்கநாதன் கூறினார்.



