மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) வழி காட்டுதலின்படியும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பால்தினகரனின் ஆலோசனையின் படியும், பிட் இந்தியா ப்ரீடம் இயக்கம்Fit India Freedom Movement) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் காருண்யா விளையாட்டு மைதானத்தில் தனிநபர் இடை வெளியோடு (கிரிக்கெட், கூடைப்பந்து) நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளை விளையாட்டின் மூலம் மகிழ்விக்கவும், உடற் பயிற்சி அளிக்கவும், பதட் டத்தை குறைக்கவும் இத்திட்டம் பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத் திட்டம் மாற்றுத் திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வகுக்கப்பட்டது.
இந்நிகழ்வை காருண்யா பல்கலைக்கழக மாணவர் நலன் இயக்குனர் அல்« பான்ஸ்ராஜ், சீஷா தொண்டு நிறுவன செயல்இயக்குனர் சாமுவேல் தாமஸ், மனநல மருத்துவர் ஷீலா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காருண்யா பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் எலைஜா பிளசிங் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினார். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்விதுறை இயக்குனர் காலேப்ராஜன் செய்திருந்தார்.



