இந்தியாவின் நம்பர் ஒன் ஷார்ட்-வீடியோ தளமான மோஜ், அதன் திறமையான படைப் பாளிகள் மற்றும் பிரபலங் களுக்காக, மதுரையில் தனது முதல் பிரத்யேக அழைப்பிதழுடன் கூடிய நிகழ்வான ‘மோஜ் டே அவுட்’ ஐ சமீபத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.
மதுரையில் இருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல படைப்பாளிகளில் ரேணுகா குமாரவேல், சல்மான் பரீஸ், வாஷிம் ஆகியோர் அடங்குவர்.
ஒரு நாள் நிகழ்வின் போது, படைப்பாளிகள் உள்ளடக்கத்தை உருவாக் கும் யோசனைகளை பரி மாறிக்கொண்டனர்.
ஒவ்வொரு குழுவி லும் ஒரு நடன இயக்குனர் மற்றும் ஒரு ஒளிப்பதி வாளர் இடம்பெற்றனர். அதிக யுஜிசிகளை உருவாக்கிய குழு, டே அவுட் இன் ‘சிறந்த பெர்ஃபார்மர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை பற்றி மோஜ் மற்றும் ஷேர்சாட், உள்ளடக்க வியூகம் மற்றும் செயல்பாடுகளின் மூத்த இயக்குனர் ஷஷாங்க் சேகர் பேசுகையில், ‘தமிழ்நாட் டின் திறமையான இளைஞர்களின் தீவிர பங்கேற்பையும் உற்சா கத்தையும் மோஜ் இல் கண்டு நாங்கள் மகிழ்ச் சியடைகிறோம்.
அவர்கள் மோஜ் இல் சமகால மற்றும் பாரம்பரிய உள் ளடக்கத்தை உருவாக்கி, தங்கள் சமூகத்துக்கு தமி ழில் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட் டிலிருந்து உற்சாகமான உள்ளடக்கமும், படைப்பாளிகளும் வெளி வருவார்கள் என்று நம்பு கிறோம்’ என்றார்.
மதுரையை சேர்ந்த மோஜ் பிரபலமான ரேணுகா குமாரவேல் கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை மதுரை யில் நடந்த மோஜ் டே அவுட் எனது வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாகும்.
மிகவும் படைப்பாற்றல் மிக்க பல புத்திசாலித்தனமான மற்றும் திறமையான படைப்பாளிகளை சந்தித்த பிறகு, நான் மிகவும் ஆர்வ மாக இருக்கிறேன்.
ஒத்த எண்ணம் கொண்ட நபர்க ளுடன் கூட்டு சேர்வதன் மூலம், ஒரே நேரத்தில் புதிய மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை உருவாக் கும் போது திறம்பட தொடர்பு கொள்ள முடிந்தது.
எங்கள் அறிவை பகிர்ந்து கொள்ளவும், உள்ளடக்கத்தை உரு வாக்கும் திறன்களை மேம்படுத்தவும் அனுமதிக் கிறது’ என்றார்.
படைப்பாளிகள் நடனம், நகைச்சுவை, நடிப்பு போன்ற பல்வேறு உள்ளடக்க பிரிவுக ளில் திறமைகளை வெளிப் படுத்தினர்.
அங்கு #திந்தாக்கு தகிட, #பொம்பள புள்ள, #பேபி நீ சுகர், #இவன் ஒரு கேன போன்ற ஹேஷ் டேக்குகள் பிரபலமாக உள்ளன.



