Homeபிற செய்திகள்மதுரையில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு - மேலும் ஒரு பெண் குழந்தை...

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு – மேலும் ஒரு பெண் குழந்தை மீட்கப்பட்டது

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர், ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது. இந்தக் காப்பகத்தை சிவகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 70- க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வரு கின்றனர்.

மேலூர் பகுதியைச் சோந்த ஐஸ்வர்யா (22), அவரது 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோரை சமூக ஆர்வலர் அசாருதீன் என்ப வர் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கத்திற்கு ஜூன் 13 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட் டுள்ளதாகக் கூறி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை மாணிக்கம் ஜூன் 29ம் தேதி உயிரிழந்து விட்டதாகவும், தத்தனேரி மயானத்தில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாகவும், சமூக ஆர்வ லர் அசாருதீனிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பான ஆவணங்களை கொடுத்த காப்பக நிர்வாகிகள், அசாருதீனிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தே கமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன் பேரில் குழந்தைகள் நலக் குழுவினர், வருவாய்த் துறையினர் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு தொடர்பாக அசாருதீனிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தது.

ஆவணங்கள் போலி என்பதால், குழந்தை மாணிக்கம் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுரு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட் டாட்சியர் முத்துவிஜயகுமார், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் மயான ஊழியர்களிடம் விசாரித்தனர்.

இதில், மாணிக்கம் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் வேறு பகுதியைச் சேர்ந்த குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங் கினர். காப்பகத்தின் உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தொடர்பு கொண்டபோது, அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் இருப்பிடத்திற்கு போலீசார் சென்ற போது, அவரைக் காணவில்லை.

இதனிடையே காப்பகத்தில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தனது இரண்டு வயது பெண்குழந்தை தீபா கடந்த 10 நாள்களாக காணவில்லை என புகார் தெரிவித்தார்.

இதைய டுத்து போலீசார் காப்பாக நிர்வாகிக ளிடம் நடத்திய தொடர் விசாரணையில், குழந்தை மாணிக்கம் இஸ்மாயில் புரத்தில் உள்ள தம்பதியருக்கும், குழந்தை தீபா கல்மேடு பகுதியிலும் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், குழந் தைகள் மாணிக்கம் மற்றும் தீபாவை மீட்டனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் காப்பகம் நடத்த உரிமை பெறவில்லை என்பது தெரியவந்ததால், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 73 பேரையும் வேறு காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்தனர்.

இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் தனியார் காப்பக பெண் நிர்வாகி கலைவாணியிடம் நடத்திய விசாரணையில், 2 குழந்தைகளும் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்பேரில் ஆண் குழந்தை மாணிக்கத்தை சட்டவிரோதமாக தத்தெடுத்த இஸ்மாயில்புரத்தைச் சோந்த கண்ணன், பவானி தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று பெண் குழந்தை தீபாவை சட்டவிரோதமாக தத்தெடுத்த கருப்பாயூரணி அருகே யுள்ள கல்மேடு பகுதியைச் சௌபர் சாதிக், அனீஸ்ராணி தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்து அனீஸ்ராணியை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img