fbpx
Homeபிற செய்திகள்ப்ளோர் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு அணி வெற்றி

ப்ளோர் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு அணி வெற்றி

சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 16ம் இந்தியன் ப்ளோர் பந்து சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட் டிகள் மூன்று நாட்கள் நடந்தன.

இந்தப் போட்டியை தமிழ்நாடு ப்ளோர் பந்து சங்கம் நடத்தியது . இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு அணி சார்பாக ஈரோடு மாவட்டத்திலிருந்து 15 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர் ஆத்விக் முதலிடத்தையும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் தீபக் திவித், சஷ்வி, குகசரவணன், ஸ்ரீராம் ப்ரித்யூ, சுஜித், சுதன், பெனியேல்ஜோஷ், ராகுல், சுதர்சன் ஆகியோர் இரண்டாம் இடமும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் பிரிவில் எப்சிபா, தீபிகா, மற்றும் அவந்திகா மூன்றாம் இடமும் மேலும் அனைத்து பிரிவுகளிலும் வெற் றியை தட்டிச் சென்றார்கள்.

ஈரோடு மாவட்ட ப்ளோர் பந்து சங்கம் கௌரவத் தலைவர் அருள் நாகலிங்கம், தலைவர் சூரியமூர்த்தி, துணைத் தலைவர் மணிகண்டன், துணை செயலாளர் ஐயப்பன், பொருளாளர் ஸ்ரீதேவி செந்தில்குமார், துணைச் செயலாளர் பிரியதர்ஷினி, சங்க முக்கிய உறுப்பினர்கள் ஈரோடு சட்டக்கல்லூரி துணைச் செயலாளர் அருண்பாலாஜி, பெஸ்ட் கார் சிவக்குமார், அதிமுக மாண வரணி செயலாளர் ரத்தன்பிரதிவ், சக்தி பில்டர்ஸ் கலையரசன், கருத்த பாண்டியன், சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா, சமூக சேவகர் மூர்த்தி,ஈரோடு புகைப்பட ஒளிப்பதிவு சங்க நிர்வாகிகள் செல்வராஜ், அன்பரசன், சிட்டி மருத்துவமனை ஜாபர் சபீர், சித்தார்த்தன், ஆர்பிட்டர் பழனிச்சாமி, கலைக்கல்லூரி மேலாளர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், ராமச்சந்திரன், கோகுல் பிரசாத்,சக்தி பஞ்சாபி சதீஷ்குமார் மற்றும் விளையாட்டுக்கு உதவிய அனைவருக்கும் உடற்கல்வி இயக்குனரும் ஈரோடு ப்ளோர் பந்து சங்க செயலாளருமான தேவகாந்தன் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img