fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சி பாலியல் வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செப். 21ஆம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்குக் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. மேலும், கடந்த 29ஆம் தேதி காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் விசாரணையை அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 20 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும், அதுவரை நீதிமன்ற காவல் நீட்டித்தும் உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img