கோவையில் இருந்து வாளையார் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
கேரளாவிற்கு ஒரு வேன் மூலமாக 3650 கிலோ ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு வாளையார் சோதனை சாவடி வழியாக சென்றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக வாகனத்தை சோதனை செய்த போது அதில் இருந்த அரிசியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்த அரிசியை பின்னர் தமிழ்நாடு குடிமைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.



