வைரவிழா கண்ட நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரின் (NAPAA) மாபெரும் சந்திப்பு கூட்டம் (ஜூலை 3) கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
இதில் வைரவிழா, பொன்விழா மற்றும் வெள்ளி விழா கண்ட மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிர்வாகச் செயலர் கே.பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
மதிப்பியல் தலைவர் நாபா மற்றும் தலைவர் பிரிசிசன் குரூப்ஸ் கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.
என்.ஐ.ஏ கல்வி நிறுவனத்தின் செயலர் முனைவர் சி.இராமசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.அசோக் சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களின் பங்களிப்பாக ரூபாய் 1 இலட்சம் நாபா நிதியத்திற்கு வழங்கினர்.
இதில் 1995-ம் ஆண்டில் படித்து முடித்த ISRO விஞ்ஞானி பி.இலட்சுமணசாமி, 1997-ம் ஆண்டில் படித்து முடித்த DRDO விஞ்ஞானி முனைவர் ஆர். சந்தானம் சிறப்புரை ஆற்றினர்.
வைரவிழா கண்ட (1960, 61, 62), பொன்விழா கண்ட (1970, 71, 72), வெள்ளி விழா கண்ட (1995, 96, 97) வகுப்பு மாணாக்கர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நாபாவின் தலைவர் ஆர்.கலைமணி, தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பா ஆறுமுகம் மற்றும் இதர நாபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொருளாளர் வி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.



