fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அமைச்சர்கள் வழங்கினர்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அமைச்சர்கள் வழங்கினர்

உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அமைச்சர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.

சுதந்திரப் போராட்ட தியாகி கொடி காத்த திருப்பூர் குமரனின் 118-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் விழா நடந்தது.
மாவட்டத் தலைவர் என்.எஸ்.கே.சிவகுமார் தலைமை தாங்கினார்.

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன், ஆதி திராவிடர்நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடிநாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img