fbpx
Homeபிற செய்திகள்பேரூர் குளத்தில் தண்ணீரில் விழுந்த நபரை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேரூர் குளத்தில் தண்ணீரில் விழுந்த நபரை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவைபுதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்களுடன் இன்று காலை, பேரூர் பெரியகுளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி, மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்காக போராடும், ஒரு நபரை உயிருடன் மீட்பது எப்படி என்றும், தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் அதிகமாக பெய்து வருகின்றது

அப்படி, மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி எனவும், நிலைய பணியாளர்கள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை தகுந்த உபகரணங்களுடன் விளக்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

மேலும் தண்ணீரில் யாராவது தவறி விழுந்து விட்டால், உடனடியாக அவர்களுக்கு என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும், என்னென்ன உதவிகளை செய்தால் அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

படிக்க வேண்டும்

spot_img