தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நேற்று (நவ.7) கோவையில் இவ்வங்கியின் ஊழியர்கள் பங்கேற்ற ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடந்தது.
கோவை மண்டலத்தில் சுமார் 250 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் எம்.ராமநாதன், துணை பொதுமேலாளர் பி.ஆர்.அசோக்குமார், உதவி பொது மேலாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



