fbpx
Homeபிற செய்திகள்பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து விறகு அடுப்பில் மண் பானை வைத்து நாம் தமிழர்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து விறகு அடுப்பில் மண் பானை வைத்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அக்கட்சியின் கோ வை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கல ந்து கொண்டவர்கள், விறகு அடுப்பில் மண் பானை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அக்கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயலாளர் பாலேந்திரன் கூறுகையில், “ தொடர்ந்து அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்து வருகிறது மத்திய மாநில அரசுகள் இரண்டுமே ஒரே கொள்கைகளை கொண்டு தான் செயல்படுகின்றன.

மக்களை வாட்டி வதைப்பது தான் அந்த கொள்கை. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத் தும் வகையில் நாங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடு வோம், என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர் திருப்பூர் சண் முகசுந்தரம் கோவை மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன், கோவை மாவ ட்ட தொழிற்சங்க தலைவர் கவாஸ்கர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img