“தூய்மையான நிகழ்வுகள் 2021” திட்டத்தின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி இருந்தது.
இதை முன்னிட்டு கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு, பள்ளிகளில் தண்ணீர் சேகரிக்கும் முறைகள், ஆன் லைன் மூலமாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு, தூய்மை பற்றிய கட்டுரை போட்டிகள், விழிப்புணர்வு குறித்த வாசக போட்டிகள், ஓவிய போட்டிகள் ,பாட்டு போட்டி ,நாடகம் என பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மாணவர்களுக்கு எப்படி சுத்தமாக கைகளை கழுவ வேண்டும் என்ற செயல்முறை விளக்கத்தை பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்பவ மேரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் ஆகியோர் மாணவர்களுக்கு அளித்தனர்.



