fbpx
Homeபிற செய்திகள்புதிய விவோ ஒய்53எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய விவோ ஒய்53எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலக அளவில் புது¬ மயான ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ, தனது இளமைமிக்க ஒய்மாடல் வரிசையில் புதிய விவோ ஒய்53 எஸ் ஸ்மார்ட்போனை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சமீபத்திய தொழில்நுட்பத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் (1டிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம்) வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் விலை 19,490 ரூபாய் ஆகும்.

விருப்பத்திற்கு ஏற்ப விரும்பும் செயலிகளை வேகமாக பதிவிறக்கம் செய்யவும், சிறந்த செயல் திறனுக்காகவும் கூடுதலாக 3ஜிபி ரேமை சேர்க்கும் வச தியும் இதில் உள்ளது.

ஒய்53எஸ் ஸ்மார்ட் போன் நவீன வடிமைப்புடன் பெரிய பேட்டரி மற்றும் சிறந்த செயல்திறன்மிக்க கேமராக்கள் ஆகியவற்றுடன் டீப் சீ ப்ளூ மற்றும் பென் டாஸ்டிக் ரெயின்போ ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடாகிளிக், பஜாஜ் இஎம்ஐ ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களில் கடந்த 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்போனிற்கான விளம்பர மாடலாக நடிகை சாரா அலிகான் உள்ளார்.
புதிய அறிமுகம் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறியதாவது:

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒய்53எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கேமராவுடன் நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற பேட்டரியுடன் ஒய்53எஸ் வெளிவந்திருக்கிறது என்றார்.

ஒய்53எஸ் நுகர்வோர் எந்தவித சிரமமும் இல்லாமல் கைகளில் எளிமையாக பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

வீடியோ மற்றும் கேம் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இது 16.71 செ.மீ. (6.58 இன்ச்) டிஸ்பிளே மற்றும் புல்எச்டி பிளஸ் (2408×1080) ஸ்கிரீனை கொண்டுள்ளது.ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img