ஜப்பானின் டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெய்கின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வைஃபையுடன் கூடிய தயாரிப்புகளை வழங்கு வதோடு, காப்புரிமை பெற்ற ஸ்ட்ரீமர் டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை 4 நட்சத்திரப் பிரிவுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இதன் டியூ கிளீன் தொழில்நுட்பம் உட்புற அலகுகளை வளிமண்டல நீரைக் கொண்டு சுகாதா ரமான மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதிப் படுத்துகிறது.
பாரம்பரிய ஸ்பிலிட் ஏர் கண்டிஷனிங் தீர்வுகளை போலல்லாமல், இதன் ஒரு வெளிப்புற அலகு பல உட்புற அலகுகளைக் கட்டுப்படுத்துகிறது.
இதன் 4 ஹெச்பி திறன் கொண்ட ஒரு வெளிப் புற அலகு 6 உட்புற அலகுகளையும், 5 ஹெச்பி திறன் வெளிப்புற அலகு 6 உட்புற அலகுகளையும், மற்றும் 6 ஹெச்பி திறன் வெளிப்புற அலகு 8 உட்புற அலகுகளையும் இயக்க பயன்படுத்தலாம்.
டெய்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பி¬ ரவேட் லிமிடெட் நிறு வனத்தின் பிராந்திய இயக்குனர் என்.கே. ராவ் கூறுகையில், ‘டெய்கினில் ஒவ்வொரு இந்தியரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகளுக்கான தொலைநோக்குப் பார் வையை கொண்டுள்ளோம்.
ஏசிகள், இப்போது அவசியமாகிவிட்ட நிலையில், வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப சேவை செய்வதற்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தரநிலைகளில் தீவிரமான மாற்றம் தேவைப்படுகிறது.
டெய்கின் ஏசியின் புதிய வரம்புகளின் ஆற்ற ல், அதிக நுகர்வுக் கட் டணங்களின் தாக்கம் இல்லாமல், காலாவதியான மற்றும் பழைய தொழில் நுட்பங்களிலிருந்து மேம்பட்டவையாகும்.
உங்கள் வீட்டிற்கு ஒரு நம்பமுடியாத ஏர் கண் டிஷனிங் தீர்வை வழங் குவதற்காக டெய்கின் விஆர்வி ஹோமை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
இது உங்கள் வீட்டின் பல வெளிப்புற அலகுகளை ஒரே வெளிப்புற அலகாக மாற்றுகிறது. இதன் திறமையான ஸ்விங் கம்ப் ரஸர், வடிவமைப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் சிறந்த குளிரூட்டும் செயல் பாடுகள் இதனை அடுத்த தலைமுறைக்கான ஏசியாக பறை சாற்றுகிறது என்றார்.



