fbpx
Homeபிற செய்திகள்புதிய அத்தியாயம்

புதிய அத்தியாயம்

கர்நாடகாவில் பிஜேபியின் ஆட்சி காலம் இன்னும் 21 மாதங்கள் இருக்கின்றன. அதாவது 2023 ஏப்ரல், மே மாதங்களில் தான் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து 10 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. ஏற்கனவே எடியூரப்பா இதுபோல ஒருமுறை பதவி இழந்த நேரத்தில் தனியாக கட்சி தொடங்கி தானும் வெற்றி பெறாமல், பிஜேபியையும் வெற்றி பெற விடாமல் செய்த கசப்பான அனுபவம் இருக்கிறது.

ஆனால் இந்த முறை அவர் பிஜேபியை வலுப்படுத்தவே பாடுபடுவேன் கவர்னர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்து விட்டார். எனவே இனி அவர் ஆற்றப்போகும் கட்சிப்பணிகளில் தான் லிங்காயத் சமுதாயத்தினரின் பங்கு இருக்க போகிறது.

இந்நிலையில் எடியூரப்பாவின் நம்பிக்கைக் குரியவரும், லிங்காயத் தலைவர்களில் ஒருவரும், உள்துறை மந்திரியுமான வடகர்நாடகத்தை சேர்ந்த 61 வயது பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

இவரது தந்தையான மறைந்த பொம்மை மத்திய மந்திரியாகவும், கர்நாடக முதல் மந்திரியாகவும் பதவி வகித்து இருக்கிறார். பசவராஜ் பொம்மைக்கு பெரும் பொறுப்பு காத்திருக்கிறது.

அடுத்து வரப்போகும் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் பிஜேபி தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக அடித்தளம் அமைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மட்டுமல்லாமல் கொரோனா அலை, வெள்ளச்சேதம், தமிழக அரசுடன் நல்லுறவு போன்ற பல பொறுப்புகளை தொடக்கத்திலிருந்தே தோளில் சுமக்க வேண்டிய நிலை அவருக்கு இருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img