பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரத்தி னசபாபதி, முன்னாள் டிஎஸ்பி வெள்ளிங்கிரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது,
வன்னியர் சமுதாயத் தினருக்கு 10.5 சதவீதம் தனி ஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணாக ஒரு மாநில அரசு 252 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை நிரா கரித்து அச்சமுதாய இளையோரின் எதிர் காலத்தை சூறையாடியது.
கடந்த மே மாதம் பதவியேற்ற திமுக அரசு சமூக நீதி வழங்குவதாக கூறி மேற்சொன்ன அதே பாதையில் சட்டத்திற்கு முரணாக சமீபத்திய எவ்வித புள்ளிவிபரங்கள் அடிப்படையும் இல்லாத ஒரு ஜாதிக்கு மட்டும் சாதகமாக வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் வழங்கி, பின் தேதியிட்டு (26.02.2021) அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த சொல்லி, நேற்று அரசாணை எண் 75/2021 பிறப்பித்துள்ளது.
எஞ்சிய அனைத்து சமூகத்தினரின் அரசி யலமைப்பு சட்ட உரிமை களை மறுப்பதுடன் சமுதா யத்தினரை நிராகரித்து கேலிக்குரியவர்களாக நடத் துகின்றனர்.
இதை இந்த அமைப்பும் 252 சமுதாயத்தினரும் உறுதியுடன் எதிர்க்கிறோம். இந்த அநீதிகளை எதிர்த்து விரைவில் செயல் திட்டங்களை அறிவிக் கவுள் ளோம்.மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.



