கோவை பார் அசோசியேஷன் தலைவர் அருள்மொழி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
16.11.2021ல் நடைபெற்ற கோவை பார் அசோசியேஷன் பொதுக்குழு கூட்ட தீர்மானத்தின்படி, கோயமுத்தூர் இ.சி. கோர்ட்டு நீதிபதியைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து நீதிமன்றங்களின் பணிகளில் இருந்தும் 17.11.2021 (இன்று) முதல் 20.11.2021 (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 4 நாட்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்பது உட்பட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்டவாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.



