பள்ளபாளையம் பேரூராட்சி சார்பில் நெகிழி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தீமைகள் குறித்து கதிர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எஸ் செல்வராஜ், செயல் அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சி அலுவலர் கிருஷ்ணன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கபிலன், அசோக், அலமேலு மனோகர், காந்திநகர் சின்னகண்ணு, சௌந்தர்வடிவு, சண்முகசுந்தரம், சந்திரசேகர், முருகன் மற்றும் கதிரி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



