பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் யுனைடெட் கல்வி நிறுவனங்களில் புதிதாக பிசியோதெரபி கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரியின் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர்விஎஸ் பிசியோதெரபி கல்லூரியின் பேராசிரியர் கண்ணபிரான் போஜன், யுனைடெட் கல்வி குழுமங்களின் தாளாளர் சண்முகம், மைதிலி சண்முகம் இயக்குனர் கைலாஷ் குமார், திரிஷலா கைலாஷ் குமார், யுனைடெட் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பெனாசீர், பிசியோதெரபி மாணவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்க விழாவினை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கண்ணபிரான் பேசுகையில் இன்றைய மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்று நாட்டிற்கு சேவையாற்ற வர வேண்டும், சிறந்த மாணவர்களை உருவாக்க யுனைடெட் கல்வி நிறுவனம் தயாராக இருக்கிறது.
சிறப்பாக பயிற்சி பெற்று மருத்துவத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.



