fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக அரசின் 100நாள் சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டாட்டம்

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக அரசின் 100நாள் சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நகர திமுக செயலாளர் பி.கே.முரளி தலைமையில் அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.

இதில் கொரோனா நிவாரண நிதி 4ஆயிரம் ரூபாய், ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு ,மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் இலவசம் , மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட 100 நாட்களில் 100 திட்டங்களை செயல்படுத்திய திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பேருந்து நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம், ராஜி, அவைத்தலைவர் அமீர்ஜான், மாவட்ட பிரதிநிதி மோகன், மாவட்ட பிரதிநிதி ஆசிப், நௌசத், ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் மாதேஷ், பேரூர் கழக துணைச் செயலாளர் கேப்டன் ஜானி, துரை, ராஜசேகர், கணேசன், மாலிக் புரான், தகவல் தொழில்நுட்பப் அணி ஆனந்த், துரைசுரேஷ்குமார், மாரிமுத்து, பெரியசாமி, முருகேசன், சின்னசாமி, மோகன், சுகுமார், மன்சூர், வாகப், அன்வர், சுகுமார், ஜபி, இதாயத்துல்லா, முருகேசன், குணசேகரன், கணேசன், பாபு, முருகன், பெருமாள், சிவா, சரவணன், ஞானம், ஏஜாஸ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img