fbpx
Homeபிற செய்திகள்பள்ளி ஆசிரியரின் சேவைக்கு கௌரவ விருது

பள்ளி ஆசிரியரின் சேவைக்கு கௌரவ விருது

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டே கவுண்டன்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பொ. மோகன்ராஜுக்கு தமிழினி புலனம் அமைப்பு சார்பில் கௌரவ விருது வழங்கப்பட்டது.

இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கினால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, மாணவர்களுக்காக தனி கல்வி வானொலி, இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆன்ட் ராய்டு மொபைல் செயலிகளை உருவாக்கியுள்ளார்.

அதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கற்றல், கற்பித்தல் சார்ந்த தொழில்நுட்ப தகவல்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள் மற்றும் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பாடப் பகுதிகளை புதிய தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் நாள்தோறும் வழங்கி வருகிறார்.

சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் மற்றும் தேசத் தலைவர்கள் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பிறந்த நாளன்று, ‘ஆன்லைன்’ வினாடி – வினா போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

செப்.5-ம்தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழினி புலனம் என்ற தன்னார்வ அமைப்பு, இவரது கல்விச் சேவையை பாராட்டி, கலங்கரை விளக்கம்- நல்லாசிரியர் என்ற விருதினை அளித்து மாண வரை செதுக்கும் சிற்பியாக இவரைப் பாராட்டி கௌரவப்படுத்தியுள்ளது.

இந்த விருதினை தமிழினி புலனம் அமைப்பின் நிறுவனர் சுபாஷ்காந்த், கௌரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் ஒருங்கிணைப் பாளர் உமா திருவேங்கடம் ஆகியோர் வழங்கினர்.

இவரது கல்விச் சேவையை ஏற்கனவே பாராட்டி பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இவருக்கு ஆசிரியர் ரத்னா விருது, கல்வி ரத்னா விருது, கல்வி செம்மல் விருது, சிறந்த ஆசிரியர் விருது, அப்துல்கலாம் விருது, அறிவுமாமணி விருது, அறிவுச் சுடர்காந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி இவரை கௌர வப்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img