பருத்தி மற்றும் பருத்திக் கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத விவசாய சந்தை வரியை நீக்கி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக விவசாய சந்தை வரி 1959-ம் ஆண்டில் இருந்து 0.5 சதவீதமாக பருத்தி மற்றும் பருத்திக் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டு வந்தது. இதை 1987-ம் ஆண்டு முதல் ஒரு சதவீதமாக உயர்த்தி, தமிழக அரசு வசூலித்து வந்தது.
இந்த வரி, தமிழகத்தில் விளையும் பஞ்சுக்கு மட்டும் அல்லாமல், பிறமாநிலங்களில்இருந்துகொண்டுவந்து,தமிழகத்தில்இருப்புவைத்துவிற்கும்பஞ்சுக்கும் விதிக்கப்பட்டுவருகிறது. கழிவுபஞ்சு, நூற்பாலைகளில் நூல் உற்பத்தி செய்யும் போது எடுக்கப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் தான் இதற்கும் வரி விதிக்கப்பட்டு வந்தது.
இதனால், நாட்டின் 45 சதவீத உற்பத்தி கொள்ளளவும், சுமார் 80 சதவீத சிறு நூற்பலைகளும், சுமார் 50 சதவீத ரோட்டார்களை கொண்ட நூற்பாலைகளும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பருத்தி விவசாயிகள், கைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், பருத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தமிழகத்தில் உள்ள நூற் பாலைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 110 முதல் 120 இலட்சம் பேல்கள் (பேல்கள் ஒன்றுக்கு 170 கிலோ) பருத்தி பஞ்சு தேவையில், சுமார் 5 முதல் 6 இலட்சம் பருத்தி பஞ்சு பேல்களே தமிழகத்தில் உற்பத்தி செய் யப்படுகின்றன.
இதனால் சுமார் 95 சதவீத பஞ்சை கிலோ ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை வாடகை செலுத்தி வாங்கும் நிலைமை உள்ளது. இக்காரணங்களால், தமி ழக நூற்பாலைகளின் போட்டி ஸ்திரன் குறைந்து வருகிறது.
இதர மாநிலங்கள், பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குவதால், பருத்தி விவசாய சந்தைவரி, தமிழக பருத்தி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுமையாக இருந்து வந்தது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த வரி யை நீக்கக்கோரி விவசாயிகளும், ஜவுளித் துறையினரும் மாநில அரசை வலியுறுத்தி வந்தன.
இந்த நீண்டகால கோரிக்கையினை ஏற்று, சட்டசபையில், 110 விதியின் கீழ், தமிழகத்தில் நிலவி வரும் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத வரி நீக்கத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடப்பு கூட்டத் தொடரிலேயே இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப் புக்கு தென்னிந்திய பஞ்சாலை கள் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை யாளர்கள் கூட்டத்தில், இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் த.ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க துணைத் தலைவர் ரவிசாம் ஆகியோர் கூட்டாக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் மட்டுமன்றி, இந்திய £விலேயே ஒருவரலாற்று சிறப்புமிக்க கொள்கை முடிவாகும் இது. ஒரு சதவீத வரி நீக்கத்தால், தமிழகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் பருத்தி விவசாயிகளுக்கு உடனடி பயன் கிடைக்கும்.
தமிழக பருத்தி உற்பத்தியை 5 இலட்சம் பேல்களில் இருந்து 25 இலட்சம் பேல்களாக 2030-ம் ஆண்டிற்குள் உயர்த்திட பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த இருக்கிறது.
இச்சூழலில் சுமார் 10 இலட்சம் பருத்தி விவசாயிகள் இதனால் பயன்அடைவார்கள். இதனால் மாநி லத்தின் ஜிஎஸ்டி வரி பல மடங்காக உயரும். தனியார் மற்றும் இந்திய பருத்திக் கழகம், தமிழகத்தில் கிடங்கில் பஞ்சை இருப்பு வைத்து தினமும் சிறு மற்றும் குறு நூற்பாலைகளுக்கு விற்க முன்வரும்.
இதனால் இந்த நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் தேவை மற்றும் மூலப்பொருள் வாங்கும் நேரம் போன்றவை கணிசமாக குறைந்து போட்டி ஸ்திரன் அதிகரிக்கும். இந்த வரி நீக்கத்தால், ரோட்டார் நூற்பாலைகள் தங்களுக்கு தேவையான கழிவு பஞ்சு முழுவ தையும் தமிழகத்திலேயே வாங்க முடிவதால், மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் கணிசமாக உயரும்.
நாட்டிலேயே அதிகமான மதிப்பு கூடிய ஜவுளிப் பொருட்களை, தமி ழக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்பட்ட நூலில் இருந்து உற்பத்தி செய்வதால் (இப்பொருள்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதால்) பன் னாட்டு ஜவுளி விற்பனையாளர்கள் தமிழகத்துக்கு அதிக வியாபாரத்தை கொடுப்பார்கள்.
இதனால் உள்ந £ட்டு, ஏற்றுமதி விற்பனைகள் கணி சமாக உயரும். ஏற்கனவே ஜவுளித் தொழிலில் புதிய மூலதனங்கள் செய்ய ஏது வான மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்திற்கு இந்த முடிவு கூடுதல் பயனைத் தரும்.
இதன் காரணமாக, புதிய மூலதனங்கள் ஏற்பட்டு பல இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு த. ராஜ்குமார், ரவிசாம் ஆகியோர் தெரிவித்தனர்.



