தமிழ்நாடு பொதுப் பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கம் மற்றும் நீர்வளத் துறையின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோடு பெருந் துறை ரோட்டில் உள்ள ஆலயமணி மஹாலில் நடை பெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் கே.பிரபாகர் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் எம்.மதன் வரவேற்றார். பொறியாளர் சங்க பொதுச் செயலாளர் கே.முருகன் சங்க நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
உதவி பொறியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எ. அப்துல் குளத்தூர், கோவை மண்டல பொதுப்பணித்துறை நிலைமை பொறியாளர் ஆர். இளஞ்செழியன் பொறியாளர் சங்க ஈரோடு கிளை செயலாளர் பி.சந்திரசேகர், ஈரோடு கிளை நிர்வாகி ஆர்.குமார், மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உறுப் பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப் படாமல் இருந்த உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வினை தற்காலிக பதவி உயர்வு மூலம் வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், நீர்வளத் துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறையில் கோவை மண்டலம் மற்றும் அரசு சிறப்பு செயலர் என தலைமை பொறியாளர்கள் பதவிகளை உருவாக்கியதற்காக தமிழக முதல்வருக்கும் பொதுப் பணித்துறை அமைச்சருக்கும் நன்றி.
உயர்நீதிமன்ற தடையின்படி ஆறாவது ஊதியக்குழு பெற்று வரும் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளருக்கும் ஏழாவது ஊதிய குழுவின் ஊதிய விகிதத்தை விரைந்து வழங்கிட முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூல மாகவே மேற் கொள்ளப்பட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பொறியியல் ஆணையம் அமைத்திட வேண்டும்.
தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ள உதவி செயற் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் மூலம் நிரந்தர பதவி உயர்வு வழங்கிடவும் துறையில் தற்போது காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர்கள் பதவிகளை பதவி உயர்வின் மூலம் இருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை தலைமை பொறியாளர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறி யாளர் அவர் களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித் துறையில் பிரிவு மட்டத் தில் பணிய £ற்றும் பொறியாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி யாக பொறியியல் பட்டம் நிர்ணயம் செய்திட வேண்டும். பொறியியல் பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கான விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ள உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர்வளத் துறையில் பிரிவு மட்டத்தில் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பிரிவுயென பிரிக்க முயற்சிப்பதை இப்போது வன்மையாக கண்டிக்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற் றும் பணியில் ஈடுபடும் பொறியாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட தமிழக அரசைகேட்டுக் கொள்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்டது.



