fbpx
Homeபிற செய்திகள்பச்சைமலை பழங்குடியினத்தை சேர்ந்த 70 பேருக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கல்

பச்சைமலை பழங்குடியினத்தை சேர்ந்த 70 பேருக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கல்

பழங்குடி மக்களின் வாழ் வாதாரததை உயர்த்தும் திட்டத்தில், முதற்கட்டமாக மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 47 பயனாளிகளுக்கு பசுவும் கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசு, 5 பயனாளிகளுக்கு தலா 2 காளைகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் பச்சைமலை மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

பச்சைமலை என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள பசுமை நிறைந்த மலைப்பகுதியாகும்.

இங்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வண்ணாடு கோம்பை ஊராட்சிகளும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தென்புறநாடு ஊராட்சியும் என மொத்தம் 3 ஊராட்சிகள் உள்ளன.

பலா மூலம் வருமானம்
குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் இந்த மலைசூழ் பகுதியில் பழங்குடியின மக்களே அதிகளவில் வசிக்கின்றனர். மரவள்ளிக் கிழங்கு, முந்திரி, நெல், பலா இவற்றின் மூலம் வருகின்ற வருமானமே இவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.

இந்நிலையில், இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி பொருளாதாரத்தைப் பெருக்குகின்ற வகையில், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள் என்னென்ன?
இதன்படி, இங்குள்ள மக்களுக்கு கறவைப் பசுக்கள் வழங்குதல், உழவுக்கு காளைகள் வழங்குதல், முந்திரியினை பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்றிட ஏற்பாடு செய்தல், தேனீ வளர்ப்பினை ஊக்குவித்து தேன் உற்பத்தியின் மூலம் தனி அடையாளத்தைக் கொண்ட தேனை விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் 10 ஆயிரம் தேனீப் பெட்டிகள் வழங்குதல், மரவள்ளிக் கிழங்கினை நல்ல முறையில் சந்தைப்படுத்துதல், மிளகு பயிரிடுதல், மிளகாய், காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உற்பத்தி செய்து தனி அடையாளத்துடன் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, பச்சைமலையில் வாழும் பழங்குடியின மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பசுக்களை வழங்கி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத் திட்டத்துக்கான துவக்க விழா 27.07.2022 அன்று நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

47 பயனாளிகளுக்கு பசுவும் கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசு, 5 பயனாளிகளுக்கு தலா 2 காளைகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

“பால் விற்று குழந்தைகளை
படிக்க வைப்போம்”
பசுவைப் பெற்ற டாப்செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இந்திரா தெரிவித்ததாவது:
கணவர் பெயர் குமார். நாங்கள் மலைவாழ் மக்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து, குழந்தைகளை படிக்க வைத்து வருகிறேன். தமிழக முதல்வர் மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்பாடடையச் செய்திடும் வகையில் இத்திட்டத்தினால் எங்களுக்கு பசு கிடைத்துள்ளது.

இந்த பசுக்களை கொண்டு பால் விற்று, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதல்வருக்கு, கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

“பசுக்களால் வாழ்க்கை உயர்கிறது”
பச்சமலையைச் சேர்ந்த முத்துலெட்சுமி தெரிவித்தத £வது:
கணவர் பெயர் சரவணன். நாங்கள் வேலைக்குச் செல்பவர்கள். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் வயலில் வேலை பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

எங்கள் குடும்பம் மிகவும் ஏழைக்குடும்பம். நாங்கள் மலைப்பகுதியில் வசிப்பதால் வெளியில் சென்று வேலைபார்க்கும் சூழ்நிலை இல்லை. விவசாயத்தையே நம்பி ஜீவனம் செய்து வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வழங்கிய பசுக்கள் மூலம் எங்கள் வாழ்க்கை உயரும் வகையில் அமைந்துள்ளது.
முதல்வருக்கு மலைவாழ் மக்களின் சார்பாகவும், குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வெளியீடு:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி.

படிக்க வேண்டும்

spot_img