நைக்காவின் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் அழகு மற்றும் பேஷன் பொருட்களின் பிங்க் ஃபிரைடே விற்பனை தற்போது நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி நிறைவடைகிறது.
2400-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கும் இந்த விற்பனையில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும், முதல் முறையாக வாங்குபவர்களுக்கு 300 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 15 நாளுக்குள் பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.
நைக்கா மற்றும் நைக்கா ஃபேஷன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் செயலியின் மேல் வலதுபுறத்தில், உங்கள் பேக் இருக்கும் இடத்திற்கு அடுத்ததாக நைக்காவின் பிங்க் பாக்ஸுடன் விருப்பப்பட்டியலை உருவாக்கவும்.
சிறந்த பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் விலைகள் விற்பனைக்கு முன் வெளியிடப்படும். இதனால் அதிக தள்ளுபடிகள், காம்போ க்கள், டீல்கள் ஆகியவற்றைக் கண்டறிய கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வரும் 28-ம் தேதி, விலை குறைப்பு அம்சத்தின் மூலம் குறைந்த கால சலுகைகளை பெறலாம். இந்த நாளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை செயலியைப் பயன்படுத்தி நேர்த்தியான சிறப்புச் சலுகைகளுடன் புதிதாக என்ன விற்பனைக்கு வந்துள்ளது என்பதை அறியலாம்.
அவை ஓரிரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். நைக்கா செயலியின் முகப்புப் பக்கத்தின் பேனர்களில் இந்த விலை குறைப்புகளைக் காணலாம்.
சிறந்த சலுகைகளுடன் சிறந்த ஆடைகளை அணிவதற்கு உதவும் பிராண்டு களுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வீடு மற்றும் தொழில்நுட்பப் பொருட்க ளுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கும் 1100-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை பிங்க் ஃபிரைடே விற்பனை மூலம் அணுகலாம்.
இந்தியா முழுவதும் உள்ள 89 கடைகளிலும், குவாலியர், அலகாபாத், மைசூர் போன்ற நகரங்களில் முதன்முறையாக திறக்கப்பட்டிருக்கும் கடைகளிலும், பிங்க் ஃபிரைடே விற்பனையின்போது, வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தை பெறலாம்.
நைக்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



