விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏறத்தாழ 628 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு, விரைவில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ரூ.1390 கோடி நிதி போர்க்கால அடிப் படையில் பெற்று இழப்பீடு தொகையாக வழங்கப்பட உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் பன் னாட்டு விமான நிலைய அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஆக.24) பன் னாட்டு விமான நிலைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்; கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார். அவர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வரு கிறது. விமான நிலைய விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகின்றன. விமான நிலையம் விரி வாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 24 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 628 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப்பட்டு விரைவில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப் பீடு தொகையாக இது வரை ரூ.29 கோடி வழங் கப்பட்டுள்ளது. ரூ.1390 கோடி நிதி போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்பட உள்ளது .
சென்னையைப் போல அதிக அளவு வியாபார வர்த்தக வசதிகள் உடைய கோவை மாவட்டம் ஒருசில வருடங்களில் நல்ல வளர்ச்சி அடையும். அதனை அடிப்படை யாக கொண்டு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகள் கேட்டு ஒருநல்ல மாதிரியான விமான நிலையமாக உருவாக்கப்படும்.
பறவை களின் தொல்லை நிரந்தரமாக நீக்க விமான நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங் களில் உள்ள கழிவுப் பொருள்கள் கொட்டுவது வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். வெளி நாட்டு வர்த்தகங்களை மேம்படுத்த தொழில் முனைவோர்களுடன் இணைந்து, கூடுதல் வெளி நாட்டு விமானங்கள் இயக் குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகர பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
பயணிகள் நிழற்குடைகளை விமான நிலையத்திற்கு அருகில் அமைக்க வேண்டும்.
மாநகரப் பகுதிகளி லிருந்து விமான நிலையத் திற்கான வழித்தடங்களில் போக்குவரத்துகளை முறையாக கண்காணிக்க வேண்டும். பழுதடைந் துள்ள சர்வீஸ் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், பன்னாட்டு விமான நிலைய ஒருங்கி¬ ணப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, மாநகர காவல் துணைஆணையர் முத்துசாமி, பன்னாட்டு விமானநிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



