நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டார் அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் பணியிட மாற்றப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித் தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அந்தப் பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இ
துதொ டர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.இதனிடையே, நீலகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அவரைப் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்பாக இடைக்கால மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக உள்ள எஸ்.பி.அம்ரித், நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



