fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்

நீலகிரி மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கபடுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா.

குன்னூர் சிம்ஸ் பூங்கா. ஊட்டி ரோஜா பூங்கா, மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், பைகாரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலா தலங்களை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

படிக்க வேண்டும்

spot_img