fbpx
Homeபிற செய்திகள்நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அமளி: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அமளி: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில் அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று (வெள்ளிக் கிழமை) காலை மாநிலங்கள வையில் பூஜ்ஜிய நேரம் தொடங்கியவுடன், அதை ஒத்திவைத்துவிட்டு நீட் விவகாரம் குறித்து விவா திக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயு டுவிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன், எம்.சண்முகம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விவாதத்துக்கு அனுமதி கோரி முழங்க வெங்கய்ய நாயுடுவோ, ‘’பூஜ்ஜிய நேரத்தை தடுக்க வேண்டாம்.

அலுவல்கள் வழக்கம் போல் நடக்கட்டும். 11.30 மணிக்கு மேலோ அல்லது 12.30 மணிக்கோ இதுபற்றி விவாதிக்கலாம்‘’ என்றார்.

ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஓயவில்லை. ‘’நீங்கள் என்ன செய்தாலும் அனுமதி யில்லை’’ என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாகக் கூறிவிட்டு வழக்கம்போல் பட்டியலிட்ட அலுவல்களை நடத்தினார்.

இதனால் அதிருப்திய டைந்த திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை நேற்று அரசுக்கே திருப்பி அனுப்பி யிருக்கிறார்.

இதனை எதிர்த்தே நாங்கள் இன்று அமளியில் ஈடுபட்டோம். பூஜ்ஜிய நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதத்திற்கு அனுமதி கோருவது மரபு மீறிய செயல் ஒன்றுமில்லை. வழக்கமான நடவடிக்கையே.

ஆனால் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க் காததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழக அரசுக்கு ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை. அவரை இரண்டு முறை எங்களின் தலை வர் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

ஆனால், நீட் விலக்கு மசோதாவை நேற்று அவர் திருப்பியனுப்பியுள்ளார். மேற்குவங்கம், கேரளா, தமிழகம், பிஹார் என எங்கெல்லாம் பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றனவோ அங் கெல்லாம் ஆளுநர்கள் பிரச்சினைக்குரியவர்களாக இருக்கின்றனர்.

இன்று எங்களுக்கு ஆதரவாக அவையில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்” என்று கூறினார்.

நீட் மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையை பறிக்கும் நிலை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்றுஆளுநரின்செயலுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img