பிரதமர் மோடி தலைமை யிலான அரசு பெரு முதலாளிக ளான அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுவ தாகவும் கடந்த ஒன்றரை ஆண் டுகளில் 14 கோடி பேர் வேலை இழந்து உள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி தெரிவித்தார்.
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவனில் தெலுங்கானா மக்களவை உறுப்பினரும் முன் னாள் கேபினட் அமைச்சரு மான உத்தம்குமார் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் விபத்து ஏற்படுத்தி 8 பேர் உயிரிழந்த சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது, கண்ட னத்திற்குரிய செயல்.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் மிக அருகிலேயே வேறொரு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
லக்கிம்பூர் விவகாரம் குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் அமைதியாக இருப்பதை இந்திய மக்கள். அனைவரும்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவரை உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் ஏன் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய பிரதமர் கூற வில்லை?
பிரதமர் மோடி அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுகிறார்.
அமேசான் மற்றும் இகாமர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டக் கட்டணமாக 8546 கோடி ரூபாய் செலுத்தி உள்ள தாக தெரிவித்து உள்ளது.
வெளி நாட்டு நிறுவனமாக அமேசான் இவ்வளவு பெரிய தொகையை சட்டக கட்டணமாக கொடுத் துள்ளது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு களில் 14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மயூரா ஜெயக் குமார் ஆகியோர் உடனிருந்தார்.



