நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமம் கப்பதொரை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவரின் 10 வயது மகன் கிரினித் அற்புத திறமை கொண்ட சாதனையாளராக மாறி உள்ளார்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடியை காட்டினால் போதும் அந்த நாட்டின் பெயரை கூறுவதோடு, அந்த நாட்டின் சிறப்பம்சம் குறித்தும் விரிவாக தெரிவிக்கும் அசாத்திய திறமை கொண்டவராக இருக்கிறார்.
நெப்போலியன், அலெக்சாண்டர் போன்ற அனைத்து அரசர்கள் மற்றும் மாவீரர்களின் வரலாற்றை மிகத்துல்லியமாக கூறும் கிரினித், எந்தெந்த நாடுகளின் மீது அவர்கள் படையெடுத்தார்கள், எப்படி வெற்றி கண்டார்கள் என்பதை உலக வரைபடத்தை வைத்து துல்லியமாகக் கூறி அசத்துகிறார்.
கிட்டத்தட்ட ஒரு அரசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் படையெடுப்பு பற்றி குறைந்தது 3 மணிநேரம் தெளிவாக எடுத்துரைக்கும் இளம் வயது சாதனையாளராக மாறி உள்ளார்.



