தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 14 காலி பதவிகளுக்கான இடங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) ராமசந்திரன், தர்மபுரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்(உள்ளாட்சி தேர்தல்கள்) ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



