ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021க்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு பெட்டி பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், உதவி காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



