fbpx
Homeபிற செய்திகள்ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திராவிட தேசம் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திராவிட தேசம் வலியுறுத்தல்

அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மக்களின் சரியான மக்கள் தொகை எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க« வண்டும் என்று திராவிட தேசம் தலைவர் வி.கிருஷ்ணாராவ் பேசினார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவர் பேசியதாவது:

சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1931-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. சுதந்திரம் பெற்றபிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை.

2011-ம் ஆண்டு அப் போதைய மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தது. ஆனால் அந்த விவரங்களை வெளியிடவில்லை.

இந்தியாவில் உள்ள பல்வேறு ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் பல தடவை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்து பல மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

இதனால் பல்வேறு சலுகைகள் பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு சேர்வதில்லை.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மத்தியில் ஆளும் அரசுகள் புற க்கணிக்கின்றன. தாழ்த் தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் மக்களின் நலனுக்காக திமுக தலை வரும் தற்போதைய தமிழக முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் மற்றும் கலைஞர் கருணாநிதி பாதையில் செல்கிறார்.

ஏழை, எளிய மருத்துவ மாணவர்களின் நலனுக்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் மூலமாக வெற்றி பெற்று ஓபிசி மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து அவர்களுக்கு பக்க பலமாகஇருக்கிறார்.

அனைத்து மாநிலங்க ளின் முதல் வர்களும் பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரலெழுப்பி, அந்த சமுதாயத்திற்கு உதவ முன் வரவேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், பிற்ப டுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் பல்வேறு தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img