கன்னியாகுமரியில் துவங்கி ராஜ்கோட் வரை 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக, சி.ஆர்.பி.எப். வீரர்கள் செல்லும் சைக்கிள் தொடர் பயணம், கோவை வந்தடைந்தது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மத்திய காவல் படையை சேர்ந்த 15 வீரர்கள் கன் னியாகுமரி முதல் டில்லி ராஜ்கோட் வரை ”ஆசாதிக அம்ருத்மஹோத்சவ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடர் சைக்கிள் பய ணத்தை துவக்கியுள்ளனர்.
கடந்த 22-ம் தேதி துவங்கிய இந்த தொ டர் சைக்கிள் பயணம் ஒவ்வொரு குழுவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹா ராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 2850 கிலோ மீட்டர் பயணம் செய்து, வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ்கோட்டை சென்றடைய உள்ளனர்.
தொடர் சைக்கிள் பயணம் செய்யும் வீர ர்கள் கோவை வந்தடைந்தனர் .
கோவை வந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பாக வரவேற்பு விழா நடைபெற்றது.
இதில் பயிற்சி மைய ஐ.ஜி. சதீஷ் சந்திரவர்மா, வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர் பாவிக் முமையா, தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன் கலந்து கொண் டார்.
நிர்வாகிகள் முரளி பாலகிருஷ்ணன், சம்பத்குமார், அருள்குமரன், முத்துகுமார், நிஷித், சுப்ரமணியம் மற்றும் நம்மநவக்கரை மகேஷ்குமார், செந்தில்நாதன், செல்ல ராகவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோவை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பயணம் செய்யும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பில், கோவையில் உள்ள சைக்கிள் குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சைக்கிள்களில் 30 கிலோ மீட்டர் வரை வீரர்களுடன் உடன் சென்றனர்.
கோவையில் இருந்து கிளம்பும் இக்குழு அடுத்ததாக கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.



