நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்தவருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன் (சேலம்), பொன்.கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



