சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், மரவள்ளி மாவுப்பூச்சி தாக்குதல் தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தொழில்நுட்ப செயல் விளக்கத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். அருகில் உதவி ஆட்சியர்(பயிற்சி) முகமது சபீர் ஆலம், இணை இயக்குநர்(வேளாண்மை) கணேசன், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்/தலைவர் வெங்கடாச்சலம், துணை இயக்குநர்(தோட்டக்கலை) சத்யா ஆகியோர் உள்ளனர்.



