fbpx
Homeபிற செய்திகள்‘செயல்முறையில் கல்வி கற்றுத்தந்தால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்’ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் பேச்சு

‘செயல்முறையில் கல்வி கற்றுத்தந்தால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்’ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் பேச்சு

ஆசிரியர்கள் செயல்மு றையில் கல்வியை மாணவர் களுக்கு கற்பித்தால், அவர் கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் பேசினார்.கோவை, ஸ்ரீராமகிருஷ் ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கான ஊக்கு விப்பு நிகழ்ச்சி நேற்று (ஆக.4) நடந்தது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங் கினார்.

கல்லூரி முதல்வர் மற் றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற் றார். பாரதியார் பல்கலைக் கழக அண்ணா ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குநர் முனைவர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.தக்சின் பாரத் ஏரியா கமாண்டர் லெப் டினென்ட் ஜெனரல் ஏ.அருண், “லீடர்ஷிப் அண்டு ஓனர்ஷிப்” என்ற தலைப்பில் பேசியதாவது:தலைமைப்பண்பு என்பது வெற்றியாளர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று.

நமக்கான பாதையில் பய ணித்தல், மற்றவர்களை வழி நடத்துதல், நேர்மையாக இருத்தல், நுண்ணறிவு, புதிய பாதையை உரு வாக்குதல், இலக்கை தீர்மா னித்தல், மற்றவர்களை மரி யாதையாக நடத்துதல், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். பெரிய வெற்றியை அடைவதற்கு மனித வளம் மிகவும் அவ சியம்.

நாட்டைப் பாதுகாக்கும் ஏராளமான ஆயுதங்களும், தளவாடங்களும் இருக்க லாம். ஆனால் அதைப் பயன்படுத்த இராணுவ வீரர்கள் அவசியம். கல்லூரி இருக்கிறதென்றால், அது நல்ல முறையில் செயல்பட மாணவர்கள் அவசியம். கற்பித்தலில் பாடம் குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் வெற்றி பெறும்.

ஆசிரியர்கள் செயல்முறையில் கல்வியை மாணவர்களுக்கு கற்பித் தால், அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். என்னால் எதுவும் முடி யாது என்று நினைக்கவே கூடாது. ஒரு கை, கால் இல்லாதவர்கள் கூட, சாதனை புரிந்து கொண் டிருக்கின்றனர். எந்தச் செயலை எடுத்துக் கொண் டாலும், அதில் 100 சதவீதம் உழைப்பை பயன்படுத்த வேண்டும்.

இன்றைய மாணவர்கள் இணையதளம் மூலம் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்ள முடியும். ஆனால், ஆசிரியர்களின் அனுபவத்தை அவர்களால் பெற முடியாது. ஆசி ரியர்கள் மூலமாக பெறும் கற்றலே சிறந்த அறிவை உருவாக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

அவர் கள் மாணவர்களாக இருந்த போது, படித்ததை இப்போது படிக்கும் மாணவர்களுடன் பொருத் திப் பார்க்கக் கூடாது. மாணவர்கள் என்ன படிக்கிறார்களோ அதை முழுமையாக கற்றுத் தெளிய வேண்டும். கல்லூரிகளைப் பொறு த்தவரை ரேங்க் பெறு வது முக்கியமல்ல. மாணவர் களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதுதான் முக்கியம் என்றார்.சிறப் பாக பதில் அளித்த மாணவர்களுக்கு மெடல் வழங்கி கௌரவித்தார். ஆங்கிலத் துறைத் தலை வர் முனைவர் ஆர். கருணாம்பிகை நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img