fbpx
Homeபிற செய்திகள்சென்னை ஐடிஎம்பி மாணவர்கள் இந்தூர் ஐஐஎம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு

சென்னை ஐடிஎம்பி மாணவர்கள் இந்தூர் ஐஐஎம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு

ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சிறந்தவர்களுக்கான மாநாடு இந்தூரில் நடைபெற உள்ளது. இதில், சென்னை ஐடிஎம்பி பள்ளி மாணவர்கள் குழு தங்களது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளது.

டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி புதுமைகளை படைக்கவும், புதிய யுக்திகளை சமாளிக்கவும் மனித வள மேம்பாட்டுத் துறையினரால் கையாளப்படும் பணியாளர் ஈடுபாடு என்ற தலைப்பில் ஆராய்ச்சி நடந்தது.

பெரும்பான்மையான ஊழியர்களால் வேலை- வாழ்க்கை முறை இரண்டையும் சமநிலையாக பராமரிக்க முடியவில்லை.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்இதன் காரணமாக, உற்பத்தித்திறன், படைப்பாற்றல் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.

செயல்திறன் மதிப் பீடு மற்றும் அது தொடர்பான அமர்வுகள் சீரற்ற முறை யிலும், திறம்பட செய்யப்படாமலும் இருந்ததாக கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் 256 ஐ.டி.நிபுணர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டதன் தொகுப்பாகும்.

படிக்க வேண்டும்

spot_img