fbpx
Homeபிற செய்திகள்சிலம்பத்தில் சாதனை

சிலம்பத்தில் சாதனை

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் விழிப்புணர்வு குறித்து சேலம் மாணவி லக்ஷிதா தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தில் உலக சாதனையாக பதிவு செய்தார்.

இந்நிகழ்ச்சி சேலம் மாவட்டம் மூன்றோடு பகுதியில் உள்ள ஆரோக்கியா மருத்து வமனை வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ராணி வரதராஜு, எழுத்தாளர் புகழேந்தி மற்றும் வீட்டோ பெண்கள் அமைப்பை சார்ந்த பெண்கள், ரக்ஷிதா வின் பெற்றோர்கள் மணி கண்டன்- திவ்யஸ்ரீ கலந்து கொண்டனர்.

வேலன் மழலையர் சிலம்பக்கலை கூட பயிற்சியாளர் ஞான பிரான்சிஸ் சிறுமிக்கு பயிற்சி அளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img