கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் தேர் திரு விழாவையொட்டி ரெட் ஃபீல்ட்ஸ் சாலை யில் உள்ள புனித சின்ன அந்தோணியார் கோவிலில் 1500க்கும் மேற்பட்டோருக்கு மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
இதில் ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மட்டன் பிரியாணி விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
சின்ன அந்தோணியார் கோவில் நிர்வாகி செல்வநாயகம் தலைமையில் இந்த அன்னதான விழா நடைபெற்றது.



