fbpx
Homeபிற செய்திகள்சிக்கல்கள் இருந்தாலும் விரைவில் புலியைப் பிடித்து விடுவோம் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சிக்கல்கள் இருந்தாலும் விரைவில் புலியைப் பிடித்து விடுவோம் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியைப் பிடிக்கப் போகும் போது மழை உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் வருவதால் சற்று சிரமமாக உள்ளதாகவும், கூடிய விரைவில் புலியை பிடித்துவிடுவோம் என் றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் மற்றும் கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறிய தாவது:


அதிமுக ஆட்சியில் வன விலங் குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வில்லை.

ரூ.6 கோடி வரையிலான தொகையை மக்களுக்கு கொடுக்காத அரசாக அதிமுக அரசு இருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்ககோரி முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார். ,

வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின் றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மண் சார்ந்த மரங்களை மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட் டுள்ளது. அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைல மரம் உள்ளிட்ட மரங்களை அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்ப டும்.

ஜி23 ஆட்கொல்லிப் புலியை பிடிக்க கேரளாவிலிருந்து வனத்துறை யினரும் வந்துள்ளனர். புலியைப் பிடிக்கப்போகும் போது மழை உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் வருவதால் சற்று சிரமமாக உள்ளது.

புலி ஆரம்பத்தில் சுற்றி திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் உயர்ரக கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் புலியை தேடி வரு கின்றனர்.


புலி வேறு இடத்திற்குச் சென்று விட்டதா என்பதை தொடர்ந்து கேமரா மூலமாக கண்காணித்து, கூடிய விரைவில் புலியைப் பிடித்துவிடுவோம்.

சிங்காரா காட்டு பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிட்டு செயல்படுகிறோம்.
இவ்வாறு அமைச்சர் கா.ராமச் சந்திரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img