மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, தகடூர் தர்மபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக தர்மபுரி தேவரசம்பட்டி, சமாதான நகரில், சமாதான ஆதரவற் றோர் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, குழந்தைகளுக்கு உணவு அளித்து அவர்களுடன் உணவருந்தினார்.
தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங்கேற்றார்.
மாநில இளைஞரணி செயலாளர் எம்.முருகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
ஜெ.தகடூர் தமிழன் வரவேற்றார். தர்மபுரி நகரச் செயலாளர் (கிழக்கு) சத்தியமூர்த்தி, தர்மபுரி நகரச் செயலாளர் (மேற்கு) வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திகேயன், ரத்தினவேல் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



